இவர் என்ன தோனி மாதிரி விளையாடிட்டு இருக்காரு ; RCB அணியில் இவர் தான் தோனி ; டூப்ளஸிஸ் பேட்டி

நேற்று நடந்து முடிந்த 6வது போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்,
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள பட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சரியாக தொடக்க ஆட்டம் மட்டுமின்றி பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஓருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.

ஆமாம், அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணி 128 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரஹானே 9, வெங்கடேஷ் ஐயர் 10, ஸ்ரேயாஸ் ஐயர் 13, நிதிஷ் ரானா 10, நரேன் 12, சாம் பில்லிங்ஸ் 14, ஜாக்சன் 0, ரசல் 25, சவுதி 1, உமேஷ் 18, வருண் சக்ரவத்தி 10 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்கத்தில் சரியான ஆட்டம் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த பெங்களூர் அணி இறுதி வரை போராடி சரியாக 19.2 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் டூப்ளஸிஸ் 5, அனுஜ் ராவத் 0, விராட்கோலி 12, டேவிட் வில்லே 18, ருத்தர்போர்ட் 28, அஹமத் 27, தினேஷ் கார்த்திக் 14, ஹசரங்க 4, ஹர்ஷல் பட்டேல் 10 ரன்களை அடித்துள்ளனர். போட்டியில் வென்ற பெங்களூர் அணி புள்ளிபட்டியலில் இப்பொழுது 6வது இடத்தில் உள்ளது.

போட்டி முடிந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டனான டூப்ளஸிஸ் அளித்த பேட்டியில் ; “இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாதிரி சின்ன சின்ன டார்கெட் மிகவும் முக்கியமான ஒன்று தான். நாங்கள் எங்களால் முடிந்த வரை செய்தோம்.”

“ஆனால் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு தான் 200 ரன்களை அடித்தோம், ஆனால் இன்று 130 ரன்களை அடிக்க இவ்வளவு கடினமான சூழல் உருவாகியுள்ளது. ஆமாம், இதெல்லாம் ஒரு அனுபவம் தான்.”

“130 ரன்கள் என்பது பிரச்சனை கிடையாது. ஆனால் விக்கெட்டை இழக்காமல் பார்த்து கொள்ள வேண்டிய சுழல் உருவானது. எப்படி சென்னை அணியில் எந்த சூழ்நிலை வந்தாலும் தோனி நிதானமாக யோசித்து ரன்களை அடிப்பாரோ, அதேபோல தான் தினேஷ் கார்த்திக் இன்றைய போட்டியில் விளையாடியுள்ளார்.”

“எங்கள் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் திறமையான வீரர்கள் தான். அதுமட்டுமின்றி, எங்களுக்கு இடையே நல்ல கருத்துக்கள் பேசப்படும். அதுமட்டுமின்றி, அனைவரும் புது புது யோசனையுடன் என்னிடம் பேச வருவது எனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.”