இவர்கள் இருவரில் ஒருவர் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; ருதுராஜ் கெய்க்வாட்-டுடன் கைகோர்க்க போகும் வீரர் ? முழு விவரம் இதோ ;

ஐபிஎல் ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்துக்கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். நாளை நடைபெற முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும் மோத உள்ளனர்.

சென்னை அணி என்றாலே ப்ளேயிங் 11 பற்றி யோசிப்பது வழக்கம். அதுவும் இந்த முறை மெகா ஏலம் நடந்த காரணத்தால் யார் யார் அணியில் இடம்பெற போகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. அதுவும் இந்த முறை சென்னை அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யார் களமிறங்க போகிறார்கள் என்று பல குழப்பம் ?

ஏனென்றால் கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளஸிஸ் போன்ற இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். ஆனால் இந்த முறை அப்படி இல்லை டூப்ளஸிஸ் ஐ- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கைப்பற்றியுள்ளது. அதனால் இப்பொழுது யார் ருதுராஜ் கெய்க்வாட்-டுடன் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்யப்போவது என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

அதில் ராபின் உத்தப்பா மற்றும் டேவன் கான்வே போன்ற இரு பெயர்கள் உள்ளனர். அதில் ராபின் உத்தப்பா கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தார். அதுமட்டுமின்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வளம் வந்துள்ளார்.

ஆனால் நியூஸிலாந்து அணியை சேர்ந்த டேவன் கான்வே அணியில் இடம்பெற்றது சென்னை ரசிகர்களை குழப்பத்தில் மூழ்கினார்கள். ஒருவேளை கான்வே தான் தொடக்க வீரராக இருக்குமோ என்று ? ஆனால் டேவன் கான்வே இதுவரை நியூஸிலாந்து அணியில் டாப் ஆர்டரில் மட்டுமே விளையாடு வந்துள்ளார்.

ஆனால் டேவன் கான்வே இதுவரை இந்தியாவில் பெரிய அளவில் விளையாடியது இல்லை என்பது தான் உண்மை. இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய கான்வே 20 டி-20 போட்டிகளில் 602 ரன்களையும், 3 ஒருநாள் போட்டியில் 225 ரன்களையும் அடித்துள்ளார்..!

இவர்கள் இருவரும் அணியில் இருப்பது இறுதி தான். ஆனால் யார் தொடக்க வீரராகவும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பார்ட்னெர்ஷிப் செய்ய போகிறார் என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்..!