கேப்டன் பதவி தோனியிடம் இருந்து பறிக்கப்பட்டதா ? ஸ்டீபன் பிளெம்மிங் கொடுத்த விளக்கம் ; முழு விவரம் இதோ;

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய உற்சாகம் நிலவியது. ஆமாம், நேற்று முன்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் களமிறங்கியது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள்.

அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. சிஎஸ்கே ரசிகர்கள் டேவன் கான்வே மற்றும் ருதுராஜ் போன்ற இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று பலர் நினைத்துக்கொண்டு இருந்தன.

ஆனால் ஏமாற்றமே நிலவியது. ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் 0 மற்றும் டேவன் கான்வே 3 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் யாருக்குமே சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது சென்னை அணி.

இறுதியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்து 70க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர். அதிலும் தோனி ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்துள்ளார். பின்னர் 131 ரன்களை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கைப்பற்றியது சென்னை.

பின்பு 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. அவர்கள் 18.3 ஓவர் முடிவில் 133 ரன்களை அடித்து சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில் தோனி கேப்டன் பதிவியில் இருந்து விலகியது பேசும் பொருளாக மாறியுள்ளது.

40 வயதான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நிச்சியமாக கேப்டனாக இருந்து அதன்பிறகு தான் ஓய்வை அறிவிப்பார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக தோனி தனது முழு கேப்டன் பதவியையும் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருப்பினும் தோனிக்கு வயதாகி கொண்டு இருப்பதால் இந்த முடிவை தோனிக்கு பதிலாக வேறு யாரவது எடுத்தார்களா ?? என்ன தான் நடந்தது என்று பல கேள்விகள் எழுந்தன. அதற்கு பேட்டி அளித்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில் ;

” கேப்டன் பதிவியை பற்றி தோனி என்னிடம் கடந்த ஆண்டு இறுதியிலேயே கூறினார். அது கடினமான நேரம் தான்.இது பல யோசனைகளுக்கு பின்பு எடுத்த முடிவு தான். தோனிக்கு பிறகு ஜடேஜா தான் கேப்டன் என்பதை நாங்கள் சரியாக தான் முடிவு செய்துள்ளோம்.”

இது தோனிக்கு 100 சதவீதம் சம்மதம் தான். இதனை நான் முடிவு எடுத்த பின்னர் சென்னை அணியின் நிர்வாகம் திரு ஸ்ரீவிவாசனிடம் கூறினோம். அதுமட்டுமின்றி நாங்கள் நினைத்த மாதிரி தான் இன்றைய போட்டி நடைபெற்றது என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெம்மிங்