சுரேஷ் ரெய்னா சொன்னதை அப்படியே செய்துள்ளார் மகேந்திர சிங் தோனி ; உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 திருவிழா நேற்று முதல் தொடங்கியது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்பது தான் உண்மை. ஆமாம், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன் கான்வே வெறும் 3 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் 20 ரன்களை கூட அடிக்காமல் ஒருவர் பின் ஒருவர் ஆட்டம் இழந்து வந்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி இருவரும் சேர்ந்து சென்னை அணியின் ரன்களை உயர்த்தினார்கள். அதிலும் மகேந்திர சிங் தோனி அடித்த அரைசதம் தான் சென்னை அணியின் ரன்களை உயர்த்த காரணமாக இருந்துள்ளது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்களை அடித்தது சென்னை. பின்பு 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. அதில் இறுதிவரை போராடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர் முடிவில் 133 ரன்களை அடித்த 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது கொல்கத்தா.

இந்த முறை சின்ன தல ரெய்னா சென்னை அணியில் இல்லை என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. ரெய்னா இப்பொழுது வீரராக இல்லாமல் ஒரு COMMENTARY ஆக உள்ளார். போட்டி முன்பு சுரேஷ் ரெய்னா கூறுகையில் ” மகேந்திர சிங் தோனி இப்பொழுது கேப்டன் இல்லை.

அதனால் அவரது பேட்டிங் நிச்சியமாக வெறித்தனமாக தான் இருக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் போட்டிகளில் அவருக்கு எந்த விதமான அழுத்தமும் இருக்காது என்று கூறினார் சுரேஷ் ரெய்னா. அதன்படி தோனி ஆட்டம் இழக்காமல் 50 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, சென்னை அணி பவுலிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் தோனி இன்னும் சாதுவாக இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

புதிய கேப்டனான ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி உதவி செய்வாரா ?? அணியை வழிநடத்த ?? என்ன செய்ய போகிறது சென்னை அணி ? இனிவரும் போட்டிகளை வெற்றியை கைப்பற்றுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!