நடப்பு ஆண்டின் ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதுவும் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி இதுவே ஆம். ஏனென்றால் கோரோணா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளது பிசிசிஐ.
இதுவரை 41 போட்டிகள் சிறப்பாகவும் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் நடைபெற்று வருகிறது ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டி. கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 41வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பொள்ளார்ட் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் மற்றும் டுபலஸிஸ் சரியான தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் ருதுராஜ் 0 ரன்கள் , டுபலஸிஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பவர்-ப்லே யில் 5 விக்கெட்டை பறிகொடுத்தது சிஎஸ்கே அணி.
நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்த நிலையில் வெறும் 114 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்கள். 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தின்ஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக் மற்றும் இஷான் கிஷான் இருவரும் சேர்ந்து ஆட்டம் இழக்காமல் 115 ரன்களை எடுத்து மும்பை அணியை வெற்றி பெற செய்தனர். சென்னை அணியை வீழ்த்தியதால் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது மும்பை அணி.
2021ஆம் போட்டியில் தோனி இருப்பாரா இல்லையா …? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி…. ரசிகர்களுக்கு ஏமாற்றமே….!! காரணம் இதோ….!!
இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் தொடர் தோல்வியால் தோனி வயது ஆகிவிட்டது அதனால் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற எல்லாம் செய்திகள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வகையில் நேற்று போட்டி முடிந்த பிறகு அவர் அளித்த பேட்டியில்;; இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம், அதுமட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் வைத்து தான் அடுத்த ஆண்டின் அணியை தயார் செய்ய வேண்டும் . இந்த வருட ஐபிஎல் 2020 போட்டி எங்களுக்கு இல்லை இது பெரும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார் தோனி. அப்பொழுது கண்டிப்பாக அடுத்த ஆண்டில் தோனி இருப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.