அடக்கடவுளே ..! தோனி கேப்டன் இல்லையா அப்போ ; ட்விஸ்ட் கொடுத்த தோனி ; சோகத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

0

ஐபிஎல் டி-20 தொடர் :

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல். இது ஒரு 20 ஓவர் போட்டி என்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பு பெற்று ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன் நடந்து முடிந்த நிலையில் 17வது சீசன் மார்ச் 22ஆம் ஆண்டு இரவு 7:30 மணியளவில் தொடங்க இருக்கிறது.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டுடன் முக்கியமான வீரர் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆமாம், சென்னை அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி எந்த நேரத்திலும் கேப்டன் பதவியில் இருந்து விலக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 போட்டியில் அதிக புகழ் மற்றும் வெற்றிகளை கைப்பற்றிய அணியாக தான் சென்னை அணி திகழ்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் 5 முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

42வயதான தோனி ஐபிஎல் தொடரில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, கடத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பிறகு பேசிய தோனி தான் இன்னும் அடுத்த ஆண்டு விளையாட ஆசை உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் கேப்டனாகவே விளையாடுவாரா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இளம் வீரர்களில் ஏதாவது ஒரு வீரரை கேப்டனாக நியமனம் செய்து போட்டியில் விளையாடி கொண்டு கேப்டனுக்கு உறுதுணையாக இருப்பார் தோனி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் இரு தினங்களுக்கு முன்பு, ஐபிஎல் 2024 போட்டியில் விளையாட ஆசையாக இருக்கிறேன், புது சீசன் மற்றும் புதிய ரோல் என்று பதிவு செய்துள்ளார் மகேந்திர சிங் தோனி. அதனால் கேப்டன் பதவியில் இருந்து நிச்சியமாக விலகிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகேந்திர சிங் தோனியை போல இரு கேப்டன் இந்திய அணிக்கு மட்டுமின்றி சென்னை அணியில் இனி கிடைப்பது கடினம் தான். இருப்பினும் தோனியின் வழிகாட்டுதல் நிச்சியமாக சென்னை அணிக்கு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சென்னை அணியின் கேப்டனாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here