இந்த வீரர்களுக்கு இறுதி ஐபிஎல் இதுதான் ; கலக்கத்தில் இருக்கும் ரசிகர்கள்; பட்டியல் உள்ளே ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்த ஐபிஎல் 2024 போட்டிகள் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி அன்று இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆமாம், இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி கொண்டு வருகின்றனர். அவ்வளவு ஏன்…! உடல் பிட் ஆகா வைத்திருக்கும் தோனி இன்னும் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்றுள்ளனர் சென்னை வீரர்கள்.

ஐபிஎல் 2024 போட்டிக்கு பின்பு ஓய்வை அறிவிக்க போகும் முக்கியமான மூன்று வீரர்கள் உத்தேச பட்டியல் :

  1. மகேந்திர சிங் தோனி :

இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலக போவதாக அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் தோனிக்கு 42 வயதாகியுள்ளது. இருப்பினும் உடல் பிட் ஆக வைத்திருப்பதால் இன்னும் விளையாடி வருகிறார்.

ஆனால், கடந்த ஆண்டு கோப்பையை வென்ற பிறகு ஓய்வை அறிவிப்பார் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் கோப்பையை வென்ற பிறகு தான் பிட் ஆக தான் இருக்கிறேன், அதனால் இன்னும் ஒரு ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட ஆசைப்படுகிறேன் என்று கூறியது சென்னை ரசிகர்கள் சந்தோசமாக தான் இருந்தது.

ஆனால், நிச்சியமாக ஐபிஎல் 2024 போட்டிதான் தோனிக்கு இறுதி சீசன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பிராவோவை போல சென்னை அணியின் பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக நியமனம் ஆவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. தினேஷ் கார்த்திக்

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் சமீப காலமாக ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி இந்திய அணியில் காம்பேக் கொடுத்தார். இருப்பினும் அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பெரிய அளவில் நன்மையை ஏற்படுத்தவில்லை. பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து விலக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

3. ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடி வந்தார் தான் ஷிகர் தவான். இருப்பினும் கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடருக்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் கூட அவருக்கு வாய்ப்பு என்பது மறுக்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஷிகர் தவான் 2023 போட்டியில் 373 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 99* ரன்களை விளாசியுள்ளார். 38 வயதான ஷிகர் தவான் ஐபிஎல் 2024 பிறகு விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் எந்த வீரர் ஓய்வை அறிவித்தார் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here