ஐபிஎல் 2021 போட்டியில் இருந்து விலகபோகிறாரா ??? தோனி..! CSK ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி..!!!!

ஐபிஎல் 2021 டி-20 போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்கள் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

15வது ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. அதனால் பல எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதில் 8 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 14 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு போல் இல்லாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

ஆனால் இப்பொழுது சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி-க்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தோனியின் அப்பா (பான் சிங் )மற்றும் அம்மா (தேவகி தேவி) வுக்கு கோரோணா இருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் தோனி மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி எல்லா மனிதர்களுக்கும் பெற்றோர் தான் முக்கியம். அதனால் ஐபிஎல்2021ல் போட்டியில் இருந்து விலகபோகிறாரா?? தோனி என்று சந்தேகம் எழுந்துள்ளது. தோனியின் பெற்றோர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மற்றும் தீவிரமான தோனி ரசிகர்கள் கடவுளை பிராத்தனை செய்து வருகின்றனர்.

மக்கள் அனைவரும் மாஸ்க் மற்றும் சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. கோரோணா என்பது மனிதர்களை தக்க கூடிய வைரஸ் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.