இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் கொல்கத்தா அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், சென்னை அணி மூன்றாவது இடத்திலும், லக்னோ அணி நான்காவது இடத்தில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் அணியாக சென்னை அணி திகழ்கிறது. மூன்று போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2 போட்டியில் வென்றுள்ளது. இறுதியாக விளையாடிய போட்டியில் தோல்வி பெற்றுள்ளது சென்னை. தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக இளம் வீரர் ரூட்டுராஜ் தலைமை தாங்கி வழிநடத்தி நடத்தி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்தனர். பின்பு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி.
ஆனால் தோல்வி தான் பெற்றது சென்னை. தொடக்க வீரர் மற்றும் கேப்டனான ரூட்டுராஜ் மற்றும் ராசின் ரவீந்திர பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தனர். இறுதி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி அணி.
பட்டைய கிளப்பிய தோனி :
கேப்டனாக இருந்த தோனி இன்னும் ஓராண்டில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற போகிறார்.அதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் இளம் வீரரான ரூட்டுராஜ் -க்கு கேப்டன் பதவியை கொடுத்தார் தோனி.
அனைத்து போட்டிகளிலும் தோனியின் பேட்டிங்-ஐ பார்க்க ரசிகர்கள் அனைத்து சென்னை போட்டிகளிலும் எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர். ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றினார் தோனி. ஆமாம், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்கு தோல்வி தான் என்ற நிலையிலும் அதிரடியாக விளையாடிய தோனி 16 பந்தில் 37 ரன்களை அடித்துள்ளார். அதில் 3 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசியுள்ளார் தோனி.