வீடியோ : ஐயோ..! ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு ; பரிதாபமாக விக்கெட்டை இழந்த சென்னை அணி வீரர் ;

போட்டி : 7 இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரூட்டுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி விளையாடி வருகின்றனர். இதுவரை இந்த இரு அணிகளும் 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

அதில் குஜராத் அணி அதிகபட்சமாக 3 போட்டிகளிலும், சென்னை அணி இரு போட்டிகளிலும் வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு இறுதி போட்டியிலும் சென்னை மற்றும் குஜராத் அணிகள் தான் விளையாடியுள்ளனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ரூட்டுராஜ் மற்றும் ராசின் ரவீந்திர அதிரடியாக ரன்களை அடித்து வருகின்றனர். டேவன் கான்வே இடத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் நியூஸிலாந்து அணியை சேர்ந்த ராசின் ரவீந்திர.

இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 1.8 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதிரடியாக விளையாடி ரன்களை அடித்த ராசின் ரவீந்திர 20 பந்தில் 46 ரன்களை விளாசியுள்ளார். அதனால் 6 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 69 ரன்களை அடித்துள்ளனர்.

அதிரடியாக விளையாடி வந்த ரவீந்திர எதிர்பாராத வகையில் விக்கெட்டை இழந்தார். 5.2 ஓவரில் ரஷீத் கான் வீசிய பந்தை எதிர்கொண்டார் ராசின் ரவீந்திர, அப்பொழுது முன்னே இறங்கிய நிலையில் பந்தை மிஸ் செய்தார். அப்பொழுது விக்கெட் கீப்பரான சஹா பந்தை பிடித்து ஸ்டும்ப்பிங் செய்தார்.

வீடியோ: