தோனி ஆ !! இப்படி !!! தோனியை பற்றி யாருக்கும் தெரியாத..!! சுவாரஸ்யமான தகவல்கள் ! முழு விவரம் இதோ ;

கிரிக்கெட் உலகில் அனைவருக்கும் தெரிந்த வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்றால் அது தல தோனி தான். இதுவரை மகேந்திர சிங் தோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்கள், 350 ஒருநாள் போட்டியில் விளையாடி 10,773 ரன்கள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களை அடித்துள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்று கொடுத்த முதல் வீரர் தோனி மட்டும் தான். ஆனால் தோனி முதல் முதலில் 2014ஆம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அவரே அறிவித்தார். பின்பு கடந்த ஆண்டு இறுதியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார்.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார். ஆனால் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமை தாங்கி வருகிறார். அப்படி என்ன சுவாரஸ்யமான தகவல் ?? தோனி இதுவரை 10 சதம் அடித்துள்ளார் ஒருநாள் போட்டியில். ஆனால் ஒருசதம் கூட ஆசிய நாடுகளுக்கு வெளியே அடித்தது இல்லை.

அதுமட்டுமின்றி, தோனி அவரது சர்வதேச கிரிக்கெட் முதல் போட்டியில் டக் (0) அவுட் ஆகியுள்ளார். தோனி கேப்டன் ஆன பிறகு தான் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் தோல்வியை கைப்பற்றியது. தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறிய பிறகு பலர் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டார்கள்.

ஆனால் இப்பொழுது தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் 9 போட்டியில் வெற்றி பெற்று 18புள்ளிப்பட்டியளில் முதல் இடத்திலும், ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக உள்ளது சிஎஸ்கே.

அதுமட்டுமின்றி, வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி அன்று உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் தோனியை ஆலோசகராக ஆகியுள்ளது பிசிசிஐ. அதனால் மீண்டும் தோனியை மீண்டும் இந்திய அணியின் உடையில் பார்க்க ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.