இரண்டு மாற்றங்களுடன் களமிறங்க போகும் சிஎஸ்கே அணி ; புதிய பிளான் போட்ட தோனி ; முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல்2021; மொத்தம் 60 போட்டிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதுவும் இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது . பின்பு கொரோனா காரணமாக போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பிசிசிஐ. பின்னர் மீண்டும் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அன்று தொடங்கியது.

இதுவரை 49போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் 11 போட்டிகள் மட்டுமே உள்ளனர். பின்னர் அதனை தொடர்ந்து ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெறும். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 9 போட்டியில் வெற்றி பெற்று ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

ஆனால் கடந்த போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது அதில் சுலபமாக 190 ரன்களை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது ராஜஸ்தான். அதில் சிஎஸ்கே அணி 189 ரன்களை அடித்தனர். ஆனால் பவுலிங் சரியாக இல்லாத காரணத்தால் 17.3 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்தனர்.

அதனால் 4ஆம் தேதி அன்று நடைபெற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதினார். இதுவரை இந்த இரு அணிகளும் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 15முறை சிஎஸ்கே மற்றும் 9 முறை டெல்லி அணியும் வென்றுள்ளது.

ஆனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நிச்சியமாக அணியில் சில மாற்றங்களுடன் தான் சிஎஸ்கே அணி விளையாடும். ஏனென்றால் சாம் கரனுக்கு சில வாய்ப்புகள் கொடுத்தும் அவர் சரியாக பவுலிங் செய்யவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி முக்கியமான பவுலரான தீபக் சஹார் இடம்பெருவார் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை 12 போட்டிகள் விளையாடிய நிலையில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த ஆண்டு தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால் இந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக சிஎஸ்கே அணி திகழ்கிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here