எப்படியோ … இவர் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து விட்டேன்… பெருமூச்சு விட்ட தோனி… ஏன் தெரியுமா ? காரணம் இதோ.. !!

நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 15வது ஐபிஎல் 2021 போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக டுபலஸிஸ் ஆட்டம் இழக்காமல் 95 ரன்கள் அடித்துள்ளனர், ருதுராஜ் 64 ரன்கள் மற்றும் மொயின் அலி 25 ரன்கள் அடித்துள்ளனர். பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்களை வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த வீரர்கள் விரைவாக ஆட்டம் இழந்தாலும் ஆன்ட்ரே ரசல் மற்றும் பேட் கம்மின்ஸ் 50+ மேற்ப்பட்ட ரன்களை எடுத்து கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இறுதி வரை போராடிய கொல்கத்தா அணிக்கு மிஞ்சியது தோல்வியே.

இந்த போட்டியில் வெற்றியை கைப்பற்றியதால் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யும்போது 16வது ஓவரில் மொயின் அலி ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் பேட்டிங் செய்தார். அப்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சூழல் பந்து வீச்சாளர் சுனில் நரேன் வீசிய பந்தில் பவுண்டரி அடித்தார். இதுவரை ஐபிஎல் போட்டியில் சுனில் நரேன் வீசிய 64 பந்தில் இதுதான் முதல் பவுண்டரி என்பது குறிப்பிடத்தக்கது.