சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டியில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 19ஆம் தேதி பல தடைகளை தாண்டி நடைபெற்று வருகிறது. எப்போதும் இந்தியாவில் நடக்க வேண்டிய போட்டி இந்த வருடம் மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெறுகிறது.
அதற்கு காரணம் கோரோணா வைரஸ் , உலகம் முழுவதும் பரவி உள்ளதால் கூட்டம் கூட்டமாக எந்த செயலும் செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்ததால் அதனால் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்தது. அதன்விளைவாக இப்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் 2020.
இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது. இதுவே முதல் முறை சிஎஸ்கே அணிக்கு இந்த நிலைமை. ஏனென்றால் இதுவரை 11 ஆண்டுகளில் சென்னை அணி எப்போதும் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி டாப் இடத்தில் இருப்பார்கள் ஆனால் இந்த ஆண்டு அதற்கு அப்படியே எதிர்மாறாக மாற்றியுள்ளது.
44வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தனர். நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 145 ரன்களை எடுத்துள்ளது பெங்களூர் அணி. அதன் பின்னர் களம் இறங்கிய பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ருதுராஜ் 50* ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் சென்னை அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.
தோனியின் மாஸ்டர் பிளான் ….. சந்தோசத்தில் ரசிகர்கள்…. !!! என்ன பிளான் தெரியுமா….??
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டோனி பல யுக்திகளை பயன்படுத்தியுள்ளார். அதுவும் பௌலிங் அப்போது. சூழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் , சண்டனர் , சஹர் போன்ற வீரர்கள் பந்துவீச்சும் போது பக்கம் மாத்தி மாத்தி பந்து வீசுவதால் பேட்ஸ்மேன்கள் சற்று குழப்பம் ஏற்படுத்தி அவுட் செய்ய முடிவு செய்த தோனி… அதே மாதிரி 6 விக்கெட் எடுத்து பெங்களூர் அணியை நினைத்த படி ஆட்டம் இழக்க செய்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.
145 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணியால் எடுக்க முடிந்தது. அதனால் சென்னை அணிக்கு ரன்களை எடுத்து வெற்றி பெறுவதற்கு இன்னும் சுலபமாக இருந்தது.