தோனி கொடுத்த பேட்டியில் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளார். …அப்படி என்ன சொன்னார் ..?

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. ஏனென்றால் 12 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைவது கடினம்.

ஐபிஎல் டி20 வரலாற்றில் ப்லே – ஆஃப் சுற்றுக்குள் வராமல் போவது இதுவே முதல்முறை. இது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு மட்டும் அதிர்ச்சி இல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதரவளிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு தோனி கேப்டன் சரியாக செய்யவில்லை என்றும் கேதர் ஜாதவ் சரியான நேரத்தில் ரன்களை எடுக்கவில்லை என்று பல குற்றச்சாட்டு எழுந்தது. கேதர் ஜாதவுக்கு பதிலாக இளம் வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த தோனி ::: இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை அதனால் தான் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்று கூறியுள்ளார் தோனி. இதனை கேட்ட ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சர்களும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

44வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய பெங்களூர் அணி நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 145 ரன்கள் எடுத்துள்ளார். அதன்பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சென்னை வீரர்கள் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

தோனி கொடுத்த பேட்டியில் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளார். …அப்படி என்ன சொன்னார் ..?

தோனி அளித்த பேட்டியில் ரசிகர்களை பற்றி கருத்துக்களை பகிர்ந்துள்ளார் ::: சென்னை சூப்பர் கிங்ஸ் பொறுத்த வரை ரசிகர்கள் மிகவும் எங்களை புரிந்து கொண்டவர்கள்… அதுமட்டுமின்றி நாங்கள் தோல்வியை சந்திக்கும்போது ரசிகர்கள் மிகவும் ஆதரவாக சமுகவலைத்தளங்களில் அவர் அவர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நாங்கள் இந்த ஆண்டு நாங்கள் மிகவும் கடினப்பட்டு முயற்சி செய்தோம் ஆனால் சில போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் உங்கள் ஆதரவு எப்பையும் தேவை … நாங்கள் இனி இருக்கும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம். ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2021யில் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் தோனி.