அவர் அடித்த ஒரு சிக்சரில் ஒன்னும் இந்திய கோப்பையை வாங்கவில்லை..; தோனியின் மீது கவுதம் கம்பிர் ஆவேசம்..! முழு விவரம்..!

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன் தரங்க வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் பேட்டிங் செய்த டில்ஷான் 33 ரன்கள், மற்றும் குமார் சங்கக்கரா 48 ரங்களில் ஆட்டம் இழந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஜயவர்தானே 103 ரன்களை ஆட்டம் இழக்காமல் இறுதிவரை பேட்டிங் செய்து அசத்தியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 274 ரன்களை எடுத்தனர் இலங்கை அணியின் வீர்ரகள்.

275 ரன்கள் எடுத்தால் வெற்றி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்பாராத விதமாக சேவாக் 0 ரன்களிலும், சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதனால் இந்திய அணிக்கு சற்றுபின்னடைவு ஏற்பட்டது.

இருந்தாலும் கவுதம் கம்பிர் 97 ரன்கள் மற்றும் விராட் கோலி 35 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இறுதிவரை போராடிய இந்திய கிரிக்கெட் அணியின் அன்றைய கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆட்டம் இழக்காமல் 91 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

48.2 வது பந்தில் சிக்சர் அடித்த மகேந்திர சிங் தோனி , இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்றியுள்ளார். இதனால் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வென்றது. சமீபத்தில் கவுதம் கம்பிர் அடித்த பேட்டியில் ; 2011, ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெல்ல தோனியின் இறுதியில் அடித்த சிக்சர் மட்டும் காரணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு முந்தைய போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் அடித்த ரன்கள் தான் இந்திய அணியை இறுதி போட்டிக்கு வழிவகுத்தனர். அதனால் தோனி மட்டும் இந்திய அணிக்காக கோப்பையை வாங்கி கொடுக்கவில்லை, என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஏப்ரல் 2ஆம் எப்பொழுதும், தோனி அடித்த இறுதி சிக்சர் வைத்து புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அதனை பார்த்து கோவப்பட்டு பேசுவது கவுதம் கம்பிரின் பழக்கம் என்றே சொல்லலாம்.

2011ஆம் ஆண்டு இறுதி உலகக்கோப்பை போட்டியில் தோனி அடித்த 91 ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்று என்பதையும் , அவர் இறுதியில் ஒரு சிக்சர் மட்டும் அடிக்கவில்லை என்றும் கவுதம் கம்பிர் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கூறியுள்ளார்.