இவரை எப்படி மிஸ் பண்ணிங்க … !!! கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்பெற போகும் தமிழக வீரர் ; வாய்ப்பு வழங்குமா பிசிசிஐ ???

இன்று காலை 8:30 மணியளவில் டெல்லியில் நடைபெற்ற சையத் முஸ்தக் அலி கோப்பை அரை இறுதி போட்டியில் , விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், தண்மை அகர்வால் தலைமையிலான ஹைதெராபாத் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதெராபாத் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. அதுமட்டுமின்றி தொடர்ந்து விக்கெட்டை இழந்ததால் சரியாக ரன்களை அடிக்க முடியமால் திணறினார்கள்….!!! இறுதி வரை போராடி 18.3 ஓவர் முடிவில் 90 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது ஹைதெராபாத் அணி.

பின்னர், 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இக்குடன் களமிறங்கியது தமிழக அணி, ஹைதெராபாத் அணியை போல பேட்டிங் செய்ய திணறும் என்று நினைத்தால் அதற்கு எதிர்மாறாக நடந்துள்ளது. ஏனென்றால் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டம் அமைந்தாலும், பின்னர் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

14.2 ஓவர் முடிவில் 92 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தமிழக அணி. அதனால் ஹைதெராபாத் அணி அரை இறுதி போட்டியில் இருந்து வெளியேறி, தமிழக அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதிலும் பலமாக இருந்த ஹைதெராபாத் அணியை சுற்றுடியது இவர் தான்…. ! அதுவும் ஒரு பவுலர் தான்….!!!

தமிழக அணியை சேர்ந்த சரவண குமார் 3.3 ஓவர் பந்து வீசி 4 விக்கெட்டை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக முதல் 2 ஓவரில் விக்கெட் மெய்டன் செய்துள்ளார். இவரை போன்ற திறமையான வீரர் இந்திய அணிக்கு நிச்சியமாக தேவை…. !!! ஆனால் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாரா ??? ஆனால் இறுதி போட்டியிலும் சரவண குமார் இதே போல பவுலிங் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கும்….!!!

திறமையான தமிழக வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் இடம் கிடைக்குமா ??? இல்லையா ?? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கமெண்ட்ஸ் பண்ணுங்க… !!!