ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷான் ஆ?? பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி கொடுத்த விராட்கோலி ; விராட் என்ன சொன்னார் தெரியுமா ??

0

இரு தினங்களுக்கு முன்பு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய அணி.

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக எல்லாம் மாறியது. முதல் இரண்டு ஓவரில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். பின்னர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் சொல்லும் அளவுக்கு இல்லை, 6 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்தது இந்திய கிரிக்கெட் அணி.

பின்பு, இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இறுதி வரை போராடி ரன்களை அடித்தார். அதனால் தான் இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 151 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக விராட்கோலி 58, ரிஷாப் பண்ட் 39, ரவீந்திர ஜடேஜா 11, சூர்யகுமார் யாதவ் 11 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. அதிலும் இந்திய அணி பவுலிங் செய்து ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் திணறியது. 17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி-யிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷான் வர போகிறாரா என்ற கேள்வி எழுந்தது…!! அதற்கு விராட்கோலி சிரித்து கொண்டே,;

சரியாக தான் பேசுறீங்களா ?? ரோஹித் சர்மாவை அணியில் இருந்து வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் இஷான் கிஷான் வைப்பேன் என்று நீங்கள் நினைக்குறீங்களா ??? என்ன பேசுறீங்க ?? ரோஹித் சர்மா ஒரு சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று அனைவருக்கும் தெரியும்.

இதை வைத்து சர்ச்சையை கிளப்ப வேண்டுமென்று இப்படியெல்லாம் கேள்வி கேட்கவேண்டாம் என்று நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார் விராட்கோலி. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா ஒரு ரன்களை கூட அடிக்கலாம் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here