வீடியோ ; நான் ஃபிட் ஆக இல்லை பாகிஸ்தான் வீரரிடம் சொல்லும் தோனி வைரலாகும் பதிவு… !!!

0

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதிலும் சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான போட்டிகள் சமீபத்தில் தான் தொடங்கியுள்ளது. அதனால் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் நேற்று இரவு நடந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதனால் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் எந்த ரன்களையும் அடிக்கலாம் தொடர்ந்து விக்கெட் இழந்ததால் முதல் 7 ஓவர் சற்று சோர்ந்து போனது இந்திய அணி.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான். எதிர் அணியான பாகிஸ்தான் எந்த விக்கெட்டையும் இழக்காமல் ஆட்டத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணி பயிற்சி மேற்கொண்டு இருந்த போது தோனி அந்த வழியாக நடந்து சென்றார். அதனை பார்த்த பாகிஸ்தான் அணி வீரர் Shahnawaz Dahani தோனியை பார்த்து நீங்கள் இன்னும் பிட் ஆக தான் இருக்கீங்க என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த மகேந்திர சிங் தோனி, நான் ஆ ?? இல்லை இல்லை எனக்கு வயது அதிகமாகிக்கொண்டு இருப்பதால் நான் ஃபிட் ஆக இல்லை என்று கூறினார் தோனி. அதற்கு உடனே இல்லை இல்லை தோனி, நீங்கள் முன்பைவிட இப்பொழுது தான் ஃபிட் ஆக இருக்கீங்க என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் வீரர் Shahnawaz Dahani. அதற்கு தோனி அங்கிருந்து சிரித்து கொண்டே சென்றார். அதன் வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here