உம்ரன் மாலிக் உலகக்கோப்பை போட்டியில் இருப்பாரா ? ரோஹித் சொன்ன பதில் ; ஒரு Condition இருக்கு ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் , டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

20 ஓவர் முடிவில் 198 ரன்களை அடித்தது இந்திய. பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. ஆனால் இறுதி வரை போராடி 148 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய.

இப்பொழுது நடைபெற்று வரும் போட்டிகளில் வீரர் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்துதான் உலகக்கோப்பை 2022 போட்டிக்கான அணியை தேர்வு செய்ய உள்ளனர். அதனால் தான் இளமை வீரர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. இந்த ஆண்டு உலகக்கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

உம்ரன் மாலிக்:

கடந்த ஐபிஎல் 2021யில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் சரியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக தான் உம்ரன் மாலிக் அணியில் இடம்பெற்றார். பின்பு, ஐபிஎல் 2022 ஏலம் நடைபெற உள்ள நிலையிலும் அவரை தக்கவைத்து கொண்டது சன்ரைசர்ஸ்.

அதற்கு முக்கியான காரணம் அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பதற்கு தான். ஆமாம், இப்பொழுது இந்திய வீரர்களில் இவர் மட்டுமே அதி வேகமாக பவுலிங் செய்து வருகிறார் என்பது தான் உண்மை. சமீபத்தில் தான் இந்திய அணியில் அறிமுகம் ஆகி அவ்வப்போது போட்டிகளில் விளையாடி வருகிறார்.

உலகக்கோப்பை போட்டியில் உம்ரம் மாலிக் விளையாடுவாரா ?

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா “நிச்சியமாக அவரது பங்களிப்பு இந்தியா அணிக்கு தேவைப்படுகிறது. சமீபத்தில் தான் இந்திய அணியில் அறிமுகம் ஆகி விளையாடி வருகிறார். அதனால் பல்வேறு அணிகளை எதிர்கொண்டும் பல நாடுகளில் விளையாடினால் தான் அனுபவம் கிடைக்கும்.”

“அதனால் இன்னும் சில போட்டிகளில் அவரை விளையாட வைத்து அதில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்த பிறகு தான் முடிவுகளை எடுக்க முடியும். பின்னர் வேகமாக மட்டும் பவுலிங் செய்வதை விட அத்துடன் ஸ்விங் சேர்ந்து பவுலிங் செய்தால் நிச்சியமாக இந்திய அணியில் அவருக்கான இடம் இருக்கும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”