இந்திய அணியில் இவரது பேட்டிங் பார்க்கவே அவ்வளவு அருமையாக உள்ளது ; பென் ஸ்டோக்ஸ் பேட்டி ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 2 என்ற நிலையில் டெஸ்ட் போட்டிக்கான தொடர் சம நிலையில் முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து இப்பொழுது டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இன்று இரவு 7:30 மணியளவில் பர்மிங்காம் மைதானத்தில் இரண்டாவது டி-20 போட்டி நடைபெற உள்ளது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்பொழுது ஒரு போட்டி நடைபெற்றால் ஒரே அணியில் இருக்கும் வீரர் பற்றியோ, அல்லது எதிர் அணியில் விளையாடும் வீரர்களை பற்றி பேசுவது வழக்கம் தான். அதேபோல தான் இந்திய அணியின் ரிஷாப் பண்ட் பற்றி பென் ஸ்டோக்ஸ் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் “இந்திய அணிக்காக ரிஷாப் பந்த் விளையாடிய முதல் இன்னிங்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. ஆமாம், அதனை நான் விரும்பி பார்த்தேன். ரிஷாப் பண்ட் -ஐ முன்பு பலர் தேவையில்லாமல் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் அதில் இருந்து அவர் மீண்டு எழுந்து வந்துள்ளார்.”

“அனைத்து விதமான போட்டிகளிலும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருகிறார் ரிஷாப் பண்ட் என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.”

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரிஷாப் பண்ட் முதல் இன்னிங்ஸ்-ல் அதிரடியாக விளையாடி 111 பந்தில் 146 ரன்களை அடித்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ்-ல் 57 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டம் இழந்துள்ளார் ரிஷாப் பண்ட்.

அதுமட்டுமின்றி, தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிக்கான தொடரில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் யாரும் இல்லாத காரணத்தால் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here