முதல் டி20 போட்டியின் உத்தேச இந்திய அணியின் விவரம் இதோ ; மாஸ் பண்ண போறாங்க…!!! ஆனால் இவருடைய நிலைமை ??

0

நாளை இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இந்த போட்டி நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைத்தனத்தில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் தான் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளை அறிவிக்கும் போது ஒருநாள் மற்றும் டி20 என்று தனித்தனி அணியை அறிமுகம் செய்தது. அதில் கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர் போன்ற சில வீரர்கள் திடிரென்று போட்டியில் இருந்து விலகினார்கள்.

இருப்பினும் நாளை நடைபெற உள்ள டி20 போட்டியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அப்படி பார்த்தால் இந்திய அணியிம் உத்தேச அணி விவரம் ; ரோஹித் சர்மா, இஷான் கிஷான், வெங்கடேஷ் ஐயர், விராட்கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ், ரவி பிஷோனி, யுஸ்வேந்திர சஹால், தீபக் சஹார், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது…!

அப்போ இந்த முறையும் ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்பு இருக்காதா? கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அணைத்து விதமான போட்டிகளிலும் அதிக ரன்களை அடித்த ஒரே வீரராக ருதுராஜ் கெய்க்வாட் திகழ்ந்து வருகிறார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் ஆனால் ப்ளேயிங் 11ல் மட்டும் வாய்ப்பே கிடைக்காது. அதுமட்டுமின்றி, இஷான் கிஷான், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.

ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதி லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய காரணத்தால் இந்திய அணியில் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதே ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை அடித்து முதல் இடத்தை கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக வாய்ப்பு இல்லையா?? என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் எப்பொழுதும் இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுப்பதில் பஞ்சம் செய்தது இல்லை. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறார் ராகுல் டிராவிட். வாய்ப்பு கொடுத்தால் தான் தெரியும் அவர் எப்படி பேட்டிங் செய்வார் என்று. வாய்ப்பே கொடுக்கலாம் அணியில் சும்மா வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே கமெண்ட்ஸ் பண்ணுங்க…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here