இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனைக்கு இது தான் தீர்வு ; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்

நாளை இரவு 7 மணியளவில் தொடங்க உள்ளது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 போட்டியில் விளையாட உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வென்று வாஷ் அவுட் செய்தது இந்திய.

இருப்பினும் இந்திய அணியில் எப்பொழுதும் மிடில் ஆர்டரில் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது என்பது உண்மை. இதற்கு இது தான் ஒரே தீர்வு என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பேட்டி. இதனை பற்றி கூறுகையில் ; எனக்கு தெரிந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சுமார் ஐந்து ஆண்டுகளாக மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது.

அதனால் நம்ம தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். எனக்கு தெரிந்து ரிஷாப் பண்ட் சிறப்பாக மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என்று நான் நினைக்குறேன். பின்னர் சூர்யகுமார் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில் இந்திய அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வீரர்கள் நம்ப வேண்டும். அதேபோல சுமன் கில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் ரின்கு சிங். அதனால் இவரையும் சிறப்பான மிடில் ஆர்டராக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். ரின்கு சிங் இந்த ஆண்டு ஐபிஎல் டி20 2022 ஏலத்தில் 55 லட்சம் கொடுத்து கொல்கத்தா அணி கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா ; மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது ஒன்று அவ்வளவு சுலபம் இல்லை. ஆமாம்..! ஏனென்றால் சூழ்நிலைக்கு ஏற்ப புரிந்து கொண்டு விளையாட வேண்டும். அதில் சில முக்கியமான விஷயம் உள்ளது. அனைத்து பந்தையும் அடிக்க ஆசைப்பட கூடாது, எவ்வளவு பெரிய பவுலராக இருந்தாலும் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

சுரேஷ் ரெய்னா கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் வெறும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார் சுரேஷ் ரெய்னா. ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா, எந்த அணியாலும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.