ஒருநாள் தொடரில் ஆவது இவருக்கு வாய்ப்பு கொடுப்பாரா ரோஹித் சர்மா ? குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றியுள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்று இரவு 7மணியளவில் கென்சிங்டன் மைதானத்தில் சாய் ஹாப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த விக்கெட் கீப்பர் :

இந்திய கிரிக்கெட் அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆமாம், ஆண்டுதோறும் திறமையான இளமை வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு கொண்டு தான் வருகிறது பிசிசிஐ. அப்படி இருக்கும் நிலையில் உறுதியான ப்ளேயிங் 11 இதுதான் என்று கணிப்பது மிகவும் கடினம்.

அதுமட்டுமின்றி, திறமை இருந்து இந்திய அணியின் விளையாட முடியாத பல வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் சஞ்சு சாம்சன். சஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்தே இந்திய அணியில் விளையாடி வருகிறார். ஆனால் 8 ஆண்டுகளில் வெறும் 11 ஒருநாள் போட்டிகளிலும், 16 சர்வதேச டி-20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

ஆண்டுதோறும் அனைத்து ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பங்களிப்பை காட்டி வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் ஆவது சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ? இல்லையா ?

சஞ்சு சாம்சன் vs இஷான் கிஷான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இரு விக்கெட் கீப்பர்கள் இருக்கின்றனர். இதில் யார் இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் விளையாட போகின்றனர். இஷான் கிஷான் கடந்த 2021ஆம் ஆண்டு தான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். இருப்பினும் சஞ்சு சாம்சன்-ஐ விட அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் விளையாடுகிறாரா என்று கேட்டால் அது சந்தேகம் தான். இருப்பினும் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here