இவர் அணியில் இல்லாமல் இரு உலகக்கோப்பையை தவறவிட்டோம் ; இதனால் தான் இவரால் விளையாட முடியவில்லை ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் தொடரை கைப்பற்றியுள்ளது.

அதனை அடுத்து இன்று இரவு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், சாய் ஹாப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதல் ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாட உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய அணிக்கு திரும்ப போகும் முன்னணி வீரர் ?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான பும்ரா கடந்த ஒரு வருடமாகவே எந்த விதமான போட்டிகளில் விளையாட முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை, டி-20 உலகக்கோப்பை போன்ற போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரிலும் பும்ராவால் விளையாட முடியவில்லை. இருப்பினும் அவர் சரியான ஓய்வு மட்டும் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் தான் விளையாடுவார் என்று யாராலும் உறுதியாக சொல்லிவிட முடியாது.

இருப்பினும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சமீபத்தில் பும்ராவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பும்ராவின் அனுபவம் மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால் அவருக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து இப்பொழுது மீண்டு வருகிறார்.”

“இருப்பினும் அயர்லாந்து அணிக்கு எதிரான அணியை இன்னும் அறிவிக்கவில்லை, ஒருவேளை பும்ரா வந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால், எனக்கும் இதனை பற்றி சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அவர் அணியில் கலந்து கொண்டு விளையாடினால் சிறப்பாக தான் இருக்கும், அதுவும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பே.”

“அவர் (பும்ரா) எந்த அளவிற்கு வேகமாக குணமடைந்து வருகிறார் என்பதை வைத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

பும்ராவின் பங்களிப்பு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற போகின்ற உலகக்கோப்பை போட்டிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?