இவரை நம்பி பாகிஸ்தான் அணியிடம் மோதுவது சிரமம் ; இவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது ; ரசிகர்கள் உறுதி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பை 2023 கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் முன்றாவது போட்டி நாளை மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.

அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபால் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியிடம் கடுமையான பேட்டிங் இருப்பதால் இந்திய அணிக்கு நிச்சியமாக சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய மற்றும் பாகிஸ்தான் :

இரு நாடுகளுக்கு இடையே பல பிரச்சனைகள் இருப்பதால் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் நடப்பதில்லை. இருப்பினும் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி விளையாடி வருகின்றனர்.

இதுவரை இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் 132 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் இந்திய கிரிக்கெட் 55 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 73 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். இருப்பினும் சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய அணியின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

அதனால் இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் ஆவது வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட்கோலி, சூரியகுமார் யாதவ், சுப்மன் கில்,இஷான் கிஷான், ஹர்டிக் பாண்டிய, ஷர்டுல் தாகூர், குல்தீப் யாதவ், முகமத் சிராஜ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார், இம்ரான் மாலிக், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல் , ஜெயதேவ் உனட்கட் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆசிய கோப்பை (ஒருநாள் போட்டி)-ல் இவரை நம்பி இந்திய அணி விளையாட போகிறதா ?

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனவர் சூரியகுமார் யாதவ். அதிரடியாக விளையாடி வருவதால் பல போட்டிகளில் விளையாடி ரன்களை குவித்து வருகிறார். இருப்பினும் டி-20 போட்டிகளில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 35,24,19,0,0,0,14,0,31,4 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இப்படி இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்காது என்றும், சூரியகுமார் யாதவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆசிய கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சூரியகுமார் யாதவிற்கு பதிலாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here