ஆசியா கோப்பை போட்டியில் இவர் இல்லையா ? ஆனால் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடம் ;

0

இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் முதல் இரு போட்டிகளில் வென்ற நிலையில் மூன்றாவது போட்டி மழை காரணமாக நடைபெற முடியவில்லை. அதனால் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளனர்.

ஆசிய கோப்பை 2023:

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2023 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் இந்திய, பாகிஸ்தான், நேபால், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாட உள்ளனர்.

வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தொடங்க உள்ள போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மற்றும் ஆசிய போன்ற போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் தான் விளையாடி வருகின்றனர்.

சமீபத்தில் தான் ஆசிய கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர், பும்ரா, முகமத் ஷமி, முகமத் சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் முக்கியமான சுழல் பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு இல்லை :

இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமின்றி உலக கிரிக்கெட் போட்டிகளில் சுழல் பந்து வீசி பல சாதனைகளை செய்து வந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அப்படி இருக்கும் நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 113 போட்டிகளில் 151 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசியா கோப்பைக்கான தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றிருக்க வேண்டுமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here