இனிமே இவருக்கு ஓபனிங் பேட்டிங் கொடுக்காதீங்க.. அந்த இடம் தான் சரியா இருக்கும்; முன்னாள் பிசிசிஐ அதிகாரி அட்வைஸ்!! எடுபடுமா? இல்ல ஆப்படிக்க பார்கிறாரா??

இந்த வீரரை 4வது இடத்தில் இறக்கி விடுங்க, பழகட்டும்; இவருக்கு துவக்கம் சரியாக இருக்காது என முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இத்தொடர் வருகிற நவம்பர் 25ஆம் தேதி துவங்குகிறது. கான்பூர் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போட்டிக்கு அஜிங்கியா ரஹானே தலைமை வகிக்கிறார். முதல் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை.

இந்நிலையில் இந்திய அணி பேட்டி வரிசை குறித்து முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி ஜட்டின் பரஞ்சப்பே கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் , “வரும் டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெறுவதால் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்ய முயற்சித்துப் பார்க்கவேண்டும்.

குறிப்பாக துவக்க வீரராக விளையாடி வரும் சுப்மன் கில் இம்முறை மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும். வெளிநாடுகளில் விளையாடுகையில் பேட்டிங் வரிசை முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் இந்திய மண்ணில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆகையால் வேறு சில வீரர்களை துவக்கம் செய்யவிட்டு, கில் கீழ் வரிசையில் விளையாட வேண்டும். 

அதேபோல் ரஹானே, புஜாரா இருவரும் இன்னும் சில வருடங்களே இந்திய அணியில் இருப்பவர். அந்த இடத்தை நிரப்புவதற்கு சுப்மன் கில் போன்றோர் சரியாக இருப்பர் என நினைக்கிறேன். அதேபோல் ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களையும் அந்த இடத்திற்கு பரிசோதித்து பார்க்க வேண்டும்.” என தனது கருத்தினை முன்வைத்தார்.

முன்னதாக இதே போன்ற ஒரு கருத்தை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமல்லாது மிடில் ஆர்டர் மற்றும் துவக்க வீரர்கள் இரண்டையும் மாற்றி, விளையாட வைத்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். அதாவது டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் துவக்க வீரர்களாக விளையாடவேண்டும். சுப்மன் கில் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.