நான் இதை செய்யும் வரை என்னை அணியில் எடுக்க வேண்டாம் ; ஹார்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

இந்திய அணி இரு மாதங்களுக்கு முன்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள், ஐபிஎல் 2021 இரண்டாம் பாகம், ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள், இப்பொழுது நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் என்று இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விளையாடி கொண்டே வருகின்றனர்.

அதிலும் சமீபத்தில் உலகக்கோப்பை டி20 போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணியை பற்றி அறிவித்த நாள் முதல் இப்பொழுது வரை ஒரே கேள்வி தான். எதற்கு ஹார்டிக் பாண்டிய அணியில் இடம்பெற்றார். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு தான் ஹார்டிக் பாண்டியவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர், அவரால் சரியாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடியாமல் போனது. பின்னர் பேட்டிங் மட்டுமே செய்ய தொடங்கினார். ஆனால் ஹார்டிக் பாண்டிய என்றால் பவுலிங் ஆல் ரவுண்டர். பல போட்டிகளில் அவரது பவுலிங் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் சிகிச்சைக்கு பிறகு சரியாக பேட்டிங் செய்வதே இல்லை. அதனால் அவரை அணியில் வைத்திருக்கலாமா இல்லையா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இருந்தாலும் ஹார்டிக் பாண்டிய சிறப்பாக விளையாடுவார் என்று அவரை ஐசிசி உலககோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவரது விளையாட்டு இல்லை…!!

ஹார்டிக் பாண்டிய பரோடா அணியில் விளையாடி வருகிறார். அதில் அவரை அணியில் வைத்துக்கொள்ளலாமா இல்லையா என்று பல கேள்விகள் எழுகின்றன. இகற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹார்டிக் பாண்டிய ஒரு முடிவு செய்துள்ளார். அதில் ” நான் முழு நேர  பவுலிங் செய்யும் வரை என்னை அணியில் எடுக்க வேண்டாம்” நான் அதற்கு முதலில் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய….!!!

ஹார்டிக் பாண்டியவை தேர்வு செய்வதற்கு முக்கியமான காரணமே..! அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் தேவை என்பதால் மட்டுமே. அதுவும் ஐபிஎல் டி 20 போட்டிகளில் அதிரடி மன்னன் ஆக இருந்துள்ளார். ஹார்டிக் பாண்டியவை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here