CSK ரசிகர்கள் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி ; ஏலத்தில் CSK -யின் மாஸ்டர் Plan இதுதான்..!

ஐபிஎல் 2021 சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. இதுவரை 14 சீசனில் 4 முறை சிஎஸ்கே அந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2021 முடிந்து சில நாட்களே ஆன நிலையில், ஐபிஎல் 22 போட்டிக்கான பேச்சு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் பிசிசிஐ முன்பே சொன்னது போல அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் ஐபிஎல் விளையாடில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதில் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகள் புதிதாக இணைந்துள்ளது. அதனால் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற போகிறது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது பிசிசிஐ.

பின்னர் மீதமுள்ள வீரர்களை கைவிட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் இப்படி செய்யும்போது தான் புதிய அணிகளுக்கும் சரியான அணி அமைய அதிக வாய்ப்பு இருக்கும், ஆனால் ஏலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்காமல்….!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் தக்கவைத்து கொள்ள போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களை தக்க வைத்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்னதான் இருந்தாலும் சுரேஷ் ரெய்னா, டூப்ளஸிஸ், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருப்பது மிகப்பெரிய அளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, சிஎஸ்கே என்று வந்தாலே இவர்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் தோன்றும்.

சமீபத்தில் வெளியான செய்தியில், சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதனை உறுதியாக சொல்ல முடியாது. ஒரு வீரரை அதிக விலை கொடுத்து எடுத்துவிட்டால் பின்னர் மீதமுள்ள வீரர்களை எடுக்க முடியாமல் போய்விடும்.

ஆனால் நிச்சியமாக ஒரு சில சிஎஸ்கே அணியின் வீரர்களை மீண்டும் ஏலத்தில் சிஎஸ்கே அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்க படுகிறது. நீங்கள் சொல்லுங்க, சிஎஸ்கே அணியில் யார் இடம்பெறுவார்கள் ? யார் இடம்பெற்றால் சிறப்பாக அணியாக சிஎஸ்கே இருக்கும் ?

உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!