ஐபிஎல் போட்டியில் இவருடைய ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் ; ஆசிஷ் நெஹ்ரா ; முழு விவரம்;

வருகின்ற ஐபிஎல் 2021 செப்டம்பர் 19ஆம் அன்று ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதுவும் 10 ஆம் அன்று ஆரம்பித்தது, ஆனால் 29 போட்டிகள் முடிந்த நிலையில் கொரோனா தோற்று ஏற்பட்டது. அதனால் தன உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

இன்னும் மீதம் 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் யார் கோப்பை வெல்ல போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை நடந்து போட்டிகளில் வைத்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னனை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

இப்பொழுது ஐபிஎல் வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாட்டில் உள்ளார்கள், அதுவும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராகில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெஹ்ரா சில சுவாரஷியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” கண்டிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் இவரது ஆட்டத்தை கான மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா.

அது வேறு யாருமில்லை; ஹார்டிக் பாண்டிய தான், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு தீவிரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவரால் பவுலிங் சரியாக வீச முடியமால் போனது. அதன்பின்னர் அவரால் பேட்டிங் கூட சரியாக செய்ய முடியவில்லை.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டிய ; 3 ஒருநாள் போட்டிகளில் சேர்த்தி 19 ரன்கள் மட்டுமே அடித்தார். அதேபோல் ஒரு டி-20 போட்டியில் 10 ரன்களை அடித்துள்ளார். அதனால் அவர் இன்னும் அந்த காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை.

கண்டிப்பாக ஐபிஎல் டி-20 2021 போட்டியில் ஹார்டிக் பாண்டிய எந்த அளவுக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார் என்று நிச்சியமாக அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம் என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா. அவர் ஐபிஎல் போட்டிகளில் 4 ஓவர் வீச முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை.

ஆனால் பொல்லார்ட் கிட்ட இருந்து இரண்டு ஓவர் ஆவது பவுலிங் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா. ஆசிஷ் நெஹ்ரா சொல்வது போல், ஹார்டிக் பாண்டிய மீண்டும் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்வாரா ? ஏனென்றால் ஐசிசி டி-20 2021 உலகக்கோப்பை போட்டியில் ஹார்டிக் பாண்டிய இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.