வலுக்கட்டாயமாக என்னை இதை செய்ய வைத்தார்கள் ; வெளிப்படையாக பேசிய ஹார்டிக் பாண்டிய ; காரணம் பயிற்சியாளரா ? கேப்டன் விராட்கோலி ? முழு விவரம் இதோ ;

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் பெரிய அளவில் விளையாடாமல் இருக்கிறார் ஹார்டிக் பாண்டிய. ஆனால் இந்திய அணியில் அறிமுகம் ஆன காலத்தில் ஹார்டிக் பாண்டியாவின் விளையாட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதில் மாற்றுக்கருத்தே இல்லை, ஆனால் சமீபத்தில் அவருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை-க்கு பிறகு அவரால் சரியாக விளையாட முடியாமல் போனது. ஹார்டிக் பாண்டிய ஒரு பவுலிங் ஆல் -ரவுண்டர், அதனால் அவருடைய முதல் வேலை பவுலிங் தான்.

கடந்த சில போட்டிகளாக அவரால் பவுலிங் செய்ய முடியாமல் வெறும் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்தார். ஆனால் பெரிய அளவில் ஆட்டத்தை மாற்றவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, நிச்சியமாக ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டியில் அவர் (ஹார்டிக் பாண்டிய) இடம்பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாற்றாக இந்திய அணியில் இடம்பெற்றார் ஹார்டிக் பாண்டிய. அது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஹார்டிக் பாண்டிய அளித்த பேட்டியில், அவர் ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் சந்தித்த பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார்.

அதில் ” இப்பொழுது எல்லாரும் என்ன பற்றி ஏதாவது பேசிக்கொண்டு இருத்தால் நான் உணர்ச்சி வசப்படுவேன். அது சரிதான். சமீப காலமாக நான் போட்டியில் விளையாட போனால் எல்ல விஷயங்களும் என்மேல் வைப்பது போல நான் உணர்கிறேன். ஐசிசி உலகக்கோப்பை போட்டியின் போது , ஆமாம் .. நான் பவுலிங் செய்யவில்லை, நான் ஒரு பேட்ஸ்மேனாக என்னை தேர்வு செய்தார்கள்.

ஆனால் முதல் போட்டியில் நான் பவுலிங் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்தேன். ஆனால் என்னால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. என்னதான் முதல் இரு போட்டிகளில் எனக்கு அடிபட்டாலும், நான் எப்படியாவது விளையாட மட்டுமே நினைத்தேன்.

நான் ஒரு ஆல் ரவுண்டர் ஆக விளையாட வேண்டும். அதில் ஏதாவது தவறு நடந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை, ஆனால் நான் ஆல்-ரவுண்டராக தான் விளையாட ஆசைப்படுகிறேன். நான் இப்பொழுது சந்தோஷமாகவும், வலுவாகத்தான் இருக்கிறேன். அதனால் இனிவரும் காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.

வருகின்ற 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் ஹார்டிக் பாண்டிய இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.