நம்பிக்கை நாயகனாக மாறிய இந்திய அணியின் பினிஷர் ; பா…! என்ன அடி ..! இங்கிலாந்து அணிக்கு பயத்தை காட்டிவிட்டார் ;

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய மற்றும் இங்கிலாந்து போட்டியின் விவரம் :

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல் தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இருந்தாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை வெளுத்தனர்.

பின்பு ரோஹித் சர்மா எதிர்பாராத வகையில் விக்கெட்டை இழந்தார். அதனால் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவானது. 2 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி முதல் 10 ஓவர் 62 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இங்கிலாந்து அணிக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.

ஆனால் அடுத்த 10 ஓவரில் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் பார்ட்னெர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தாக மாறியது. ஆமாம், இருவரும் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்த காரணத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 168 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 5, ரோஹித் சர்மா 27, விராட்கோலி 50, சூர்யகுமார் யாதவ் 14, ஹர்டிக் பாண்டிய 63, ரிஷாப் பண்ட் 6 ரன்களை அடித்தனர்.

இப்பொழுது 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி.

ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு உதவியாக மாறியுள்ளது :

சரியாக சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்த பிறகு களமிறங்கிய ஹர்டிக் பாண்டிய, தொடக்கத்தில் விராட்கோலிக்கு ஆதரவாக விளையாடினார். பின்பு ஓவர் குறைவாக இருப்பதை புரிந்து கொண்ட ஹர்டிக் பாண்டிய பவுண்டரிகளை அடிக்க தொடங்கினார். அதினால் 33 பந்தில் 63 ரன்களை விளாசியுள்ளார். அதில் 5து சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அதில் அடங்கும். ஒருவேளை ஹர்டிக் பாண்டிய ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்திருந்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு 120 ரன்கள் கூட கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை.