என்ன செய்வது என்ற தெரியாமல் குழப்பத்தில் பேசிய ரோஹித் சர்மா ; தொடர்ந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய வீரர் ;

0

Adelaide மைதானத்தில் தொடங்கியது அரையிறுதி போட்டி. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றனர்.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல் தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்த நிலையில் விராட்கோலி மற்றும் ரோஹித் ஷர்மா சேர்ந்து சிறப்பாக விளையாட வந்தனர். ஆனால் ஜோர்டான் பந்து வீச்சில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

10 ஓவர் முடிந்த நிலையில் 62 ரன்களை அடித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இப்பொழுது விராட்கோலி மற்றும் சூர்யகுமார் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து வாய்ப்பை இழந்து வரும் தமிழக வீரர் :

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி-20 2022 லீக் போட்டிகளில் பெங்களூர் அணியின் பினிஷராக விளையாடிய தினேஷ் கார்த்திக்-கு பல ஆண்டுகள் கழித்து இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை போட்டியில் திணறிக்கொண்டு வருகிறார்.

ஆமாம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டி வரை அவரது அதிரடியான ஆட்டம் எந்த போட்டியிலும் பார்க்கமுடியவில்லை. 4,1 போன்ற ரன்களை அடித்துவிட்டு ஆட்டம் இழந்து வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றதால் ரிஷாப் பண்ட் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனால் தீடிரென்று முடிவு செய்த ரோஹித் சர்மா ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்-கு பதிலாக ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

டாஸ் தோல்வி பெட்ரா பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் ; ” நாங்களும் பேட்டிங் தான் முதலில் தேர்வு செய்ய முடிவு செய்திருந்தோம். இந்த உலகக்கோப்பை போட்டியில் எங்கள் அணி சிறந்த முறையில் விளையாடி உள்ளனர். ஆனால் இது போன்ற முக்கியமான போட்டிகளில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு விளையாட வேண்டும். எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் திறமையான வீரர்கள் தான். இருந்தாலும் அதில் இருந்து ப்ளேயிங் 11 ஐ தேர்வு செய்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது. ஆனால் ஜிம்பாபே தொடரில் விளையாடிய அதே அணி தான் என்று கூறியுள்ளார் ரோஹித்.”

ப்ளேயிங் 11 தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷாப் பண்ட் போன்ற இரு வீரர்களில் ஒருவருக்கும் தான் வாய்ப்பு கொடுக்கப்பட முடியும். ஜிம்பாபே அணிக்கு எதிரான லீக் போட்டிகளில் விளையாடிய ரிஷாப் பண்ட் 3 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளார். அதனால் யார் இடம்பெற்றாலும் பெரிய அளவில் ரன்களை அடிக்க போவதில்லை என்ற மனநிலை உருவாகியுள்ளது. இருந்தாலும் தினேஷ் கார்த்திக்-ஐ காட்டிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அனுபவம் ரிஷாப் பண்ட் -க்கு அதிகம் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here