இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இடம்பெற போகிறாரா தமிழக வீரர் ? ஆலோசனையில் இருக்கும் பிசிசிஐ ; அட… நம்ம ஆளு.. !!!

0

ஐயோ…! டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி இன்னும் சில நாட்களில் பூகம்பம் போல வெடித்து சிதற போகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கியது இந்திய அணி. அதில் 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னடைவை சந்தித்த காரணத்தால் தொடரை கைப்பற்றவில்லை.

அதனால் விரக்தி அடைந்த விராட்கோலி , திடிரென்று கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் பலர் அதிர்ச்சியில் இருந்தாலும் அடுத்த கேப்டன் என்ற கேள்விதான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. நிச்சியமாக ரோஹித் சர்மா கேப்டனாக இடம்பெறுவது மிகவும் கடினம் தான். ஏனென்றால் டெஸ்ட் போட்டியில் அதிக நாட்கள் விளையாட வேண்டிய ஒரு போட்டியாகும்.

அதிலும் சமீப காலமாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவுக்கு அடிக்கடி தொடை தசை பிடிப்பு ஏற்படுகிறது. அதனால் அவரால் விளையாட முடியாமல் போய்விடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் இதே தான் நடந்தது, அதில் ரோஹித் சர்மா தொடர் முழுவதிலும் விளையாடவில்லை. அதனால் தான் சந்தேகம் எழுந்துள்ளது…!

ஆனால் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதுவரை ரவிச்சந்திரன் அஸ்வின் 84 டெஸ்ட் போட்டிகளில் பவுலிங் செய்துள்ளார். அதில் அதிகபட்சமாக 430 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் முன்னணி பவுலராக வலம் வருகிறார் அஸ்வின்.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில் ; நான் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு தான் நான் கேப்டனாக மாறியுள்ளேன். ஏனென்றால் வேறு யாரும் கேப்டனாக விரும்பவில்லை என்றதால் தான் என்று கூறியுள்ளார் கும்ப்ளே. அதனால் இந்த முறை ஒரு பவுலரை கேப்டனாக பிசிசிஐ நியமனம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஒருவேளை ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டாம் என்று முடிவு செய்தால் இந்திய அணியின் முன்னணி பவுலரான ஜஸ்ப்ரிட் பும்ரா கேப்டனாக இடம்பெறலாம். ஆமாம்.. ! கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இவருடைய பெயர் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை …!!

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க… இந்திய அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் வேண்டுமா ? அல்லது பவுலர்கள் யாராவது இடம்பெற்றால் சிறப்பான அணியாக இருக்குமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here