இவர் தான் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் ; இவரை அடுச்சிக்க ஆளே இல்லை ; இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்….!!!

0

யாரு சாமி அடுத்த இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் ? என்ற கேள்வி தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது….!

சமீபத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 1 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆமாம்..! அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் போட்டி, இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். இதுவரை தென்னாபிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கான தொடரை வென்றதே இல்லை.

அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வென்ற இந்திய அணிக்கு அதிக அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பின்னர் இரு போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்தது இந்திய. அதனால் வேறு வழியில்லை, டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதனால் இப்பொழுது அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் அளித்த பேட்டியில் ; டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பற்றி பேசியுள்ளார்.

அதில் ” இந்திய அணிக்கு சிறந்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் தான். ஏனென்றால் அவரிடம் சிறப்பான லீடர்ஷிப் தகுதி உள்ளது. அவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. அதனை முறியடிக்க இன்னும் யாருமில்லை.

டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியது அது விராட்கோலியின் தனிப்பட்ட விருப்பம், அதில் யாரும் அதனை பற்றி பேச முடியாது என்றும் கூறியுள்ளார் கெவின்.

விராட்கோலி டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு கேப்டனாக பொறுப்பேற்றார் ரோஹித் சர்மா, அதன் பின்னர் ஒருநாள் போட்டியிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் ஹிட் மேன் ரோஹித் சர்மா. இப்பொழுது ஒரே கேள்வி மட்டும் தான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்பது தான் …! அதில் ரோஹித் சர்மா இடம்பெறுவது சிக்கல் உள்ளது.

ஏனென்றால் ரோஹித் ஷர்மாவுக்கு அடிக்கடி தொடையில் தசை பிடிப்பு ஏற்படுகின்றன. அதனால் முக்கியமான நேரங்களில் அவரால் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. சமீபத்தில், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இதே காரணத்திற்காக தொடரில் முழுவதும் விளையாட முடியாமல் போய்விட்டது.

அதனால் இந்த முறை டெஸ்ட் போட்டிக்கான கேப்டனை தேர்வு செய்வதில் பிசிசிஐ நிச்சியமாக தலைவலியாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here