இப்படி ஒரு தன்மை மகேந்திர சிங் தோனியிடம் மட்டும் தான் உள்ளது ; கிறெக் சப்பல் பேட்டி ; அப்படி என்ன தரம் தோனியிடன் உள்ளது தெரியுமா ?

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி, இதுவரை பல சாதனைகளை மட்டுமின்றி இந்திய அணியை வழிநடத்தி அனைத்து விதமான ஐசிசி உலககோப்பையும் இந்திய அணி வெற்றி பெற அதிக காரணமாக இருந்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் தான் மகேந்திர சிங் தோனி, பின்னர் அதிக ரன்களை அடித்து இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார் தோனி. பின்னர் 2007ஆம் ஆண்டு கங்குலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு மகேந்திர சிங் தோனி பொறுப்பேற்றார்.

தோனி இந்திய அணியில் இருக்கும் போது 2005 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கிறெக் சப்பல் இடம்பெற்றார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனி எப்படி சிறந்த வீரராக வலம் வந்துள்ளார் என்பதை பற்றி கூறியுள்ளார் கிறெக் சப்பல்.

தோனியை பற்றி கூறுகையில் ; நான் தோனி இருக்கும் காலத்தில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளேன். நல்ல திறமையான வீரருக்கு தோனி தான் உதாரணம். ஆமாம்.., ஏனென்றால் எப்பொழுதும் அவர் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள தான் விளையாடி வந்தார். அதுமட்டுமின்றி திறமையான வீரர்கள் மத்தியில் விளையாடும் போது,

சரியான நேரத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும். ஒரு போட்டியில் எப்படி நுணுக்கங்களோடு விளையாடி வெல்ல வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதுமட்டுமின்றி, தோனியின் எப்பொழுதும் சரியான முடிவுகளை மட்டுமே எடுத்து வந்துள்ளார் என்று கூறியுள்ளார் கிறெக் சப்பல்.

கிறெக் சப்பல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் காலத்தில் தோனி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 183, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 72, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்களை அடித்துள்ளார் தோனி. அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டியில் தோனி மொத்தமாக 350 போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களை அடித்துள்ளார்….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here