இவங்க இருவரும் இந்திய அணியில் ஒரே நேரத்தில் விளையாடினால் ; இந்திய அணியை அசைக்கவே முடியாது ; முன்னாள் வீரர் உறுதி ;

0

சமீபத்தில் தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் டெஸ்ட் போட்டியில் 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்ட காரணத்தால் டெஸ்ட் போட்டிக்கான தொடரை கைப்பற்றவில்லை.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் விளையாடி இந்திய அணி 0 – 3 என்ற கணக்கில் இந்திய அணி அனைத்து மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது இந்திய. அதனால் இந்திய அணியை பற்றி பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் மறக்க முடியாத போட்டி என்றால் அது ஒருநாள் போட்டி தான். .கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் இரு போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் பேட்டிங் செய்தது. ஆனால் முன்றாவது போட்டியில் நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியது இந்திய அணி.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தீபக் சஹார் முதல் சில ஓவரில் முக்கியமான இரு விக்கெட்டை கைப்பற்றி எதிர் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார் தீபக். பின்னர் பேட்டிங் செய்த தீபக் சஹார் டி-20 போட்டிகளில் விளையாடுவது போல 50க்கு மேற்பட்ட ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார்.

இருந்தாலும் இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியை தான் சந்தித்துள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகிர் கான் கூறுகையில் ; இறுதி ஒருநாள் போட்டியில் தீபக் சஹார் க்கு அணியில் இடம்கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பேட்டிங் செய்தார்.

சரியான நேரத்தில் பவுலிங் செய்து விக்கெட்டை-யும் கைப்பற்றியுள்ளார்கள். இந்திய அணி எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு விளையாடி வந்துள்ளார் தீபக். அதனால் இந்திய அணிக்கு பாசிட்டிவ் தான். அதேபோல, ஷர்டுல் தாகூரும் சிறப்பாக விளையாடி வந்தார்.

இவர்கள் இருவரும் இந்திய அணியில் ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி கிடைப்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, 6வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்ற பிறகு இவர்கள் இருவரும் (ஷர்டுல் தாகூர் மற்றும் தீபக் சஹார் )ஆகிய மூன்று வீரர்களும் ஒரே நேரத்தில் அணியில் விளையாட வேண்டும்.

வரும் காலத்தில் பெரிய பெரிய போட்டிகளில் விளையாடும் போது, ஷர்டுல் தாகூர் மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரும் விளையாடும் போது அதிக வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் ஜாகிர் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here