ஹார்டிக் பண்டியாவுக்கு நேர்ந்த கொடுமை ; ஆல் ரவுண்டருக்கு இந்த நிலைமையா ?? என்ன நடந்தது ;

நாளை முதல் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் திவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பொழுதும் சம்பளம் என்பது அவர்கள் விளையாடும் போட்டியை வைத்துதான் வழங்கப்படும். அதில் மொத்தம் நான்கு வகை உள்ளது. அதில் A+ என்றால் 7 கோடி, A என்றால் 5 , B என்றால் 3 மற்றும் C என்றால் 1 கோடி சம்பளம் இதில் இடம்பெறும் வீரர்களுக்கு மட்டுமே பிசிசிஐ சார்பாக சம்பளம் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் சரியாக விளையாடவில்லை. ஆமாம்..! ஹார்டிக் பாண்டிய ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு சில போட்டிகளில் வெறும் பேட்டிங் மட்டுமே செய்து கொண்டு வந்தார் ஹார்டிக் பாண்டிய.

ஆனால் அவரது பவுலிங் தான் அவரது பலமே. அந்த நேரத்தில் தான் ஐசிசி உலகக்கோப்பை டி20 2021 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இருந்தது. அதில் ஹார்டிக் பாண்டிய இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பலன் இல்லை. பின்னர் உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் ஹார்டிக் பாண்டிய எந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் காட்டவில்லை.

ஆமாம்..! அதற்கு முக்கியமான காரணம் அவர் பவுலிங் செய்ய தொடங்கிய பிறகு தான் நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் கூறினார் ஹார்டிக் பாண்டிய. அதனால் அவர் பல போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் போனது. சமீபத்தில் தான் இந்திய அணியின் வீரர்களுக்கான சம்பள பட்டியலை அறிவித்துள்ளது. அதில் ஹார்டிக் பாண்டிய கடந்த ஆண்டு A பிரிவில் 5 கோடி பெற்றார்.

ஆனால் இந்த முறை C பிரிவில் உள்ளதாக பிசிசிஐ கூறியது. அதுமட்டுமின்றி அக்சர் பட்டேல், முகமது சிராஜ் C பிரிவில் இருந்து B பிரிவுக்கு முன்னேறியுள்ளனர். இந்த முறை ஷ்ரேயாஸ் ஐயர் B பிரிவில் இடம்பெற்றுள்ளார். ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் கடந்த ஆண்டு போல இந்த முறையும் A பிரிவில் தொடர்ந்து வருகின்றனர்.

ஹார்டிக் பாண்டிய இந்த ஆண்டு ஐபிஎல் டி20 2022 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கி விளையாட போகிறார்.