இந்த மூன்று வீரர்களில் ஒருவர் தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் டி20 2022 லீக் போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த முறை புதிதாக லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் இந்த முறை மெகா ஏலம் நடத்தப்பட்டது. அதில் பல வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் டி20 ஏலத்தில் மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லை.

ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் அறிமுகம் ஆன முதல் ஆண்டில் இருந்து இதுவரை 14 சீசன்களிலும் மகேந்திர சிங் தோனி தான் வழிநடத்தி வந்தார். இந்த முறை மெகா ஏலம் என்ற காரணத்தை வெறும் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதில் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை தக்கவைத்தது சிஎஸ்கே.

பின்னர் ஏலத்தில் யாரை கைப்பற்ற போகிறது என்று பல கேள்விகள் இருந்தன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 14 கோடி விலை கொடுத்து தீபக் சஹாரை கைப்பற்றியது சென்னை. இது சரியான முடிவு தான் என்று சிஎஸ்கே ரசிகர்கள் அதனை வரவேற்பு கொடுத்தனர். ஆனால் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது.

ஆனால் அதில் இருந்து அவரால் சரியாக விளையாட முடியாமல் போனது. தீபக் சஹார் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் காயம் பெரிய அளவில் இருந்த காரணத்தால் அவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்றியது பிசிசிஐ. இருப்பினும் சமீபத்தில் வந்த தகவலின் படி தீபக் சஹாரால் ஐபிஎல் டி20 2022 போட்டிகளிலும் விளையாட முடியாது போல தெரிகிறது.

தீபக் சஹாருக்கு பதிலாக இவர்கள் மூன்று வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார் சென்னை அணிக்கு சிறப்பான மாற்றமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தீப் வாரியர் ; கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இருப்பினும் இந்த முறை எந்த அணியிலும் இடம்பெறவில்லை.

கேரளா அணியை சேர்ந்த சந்தீப் வாரியர் கடந்த 2018 – 2019ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பவுலராக திகழ்ந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு சையத் முஸ்தக் அலி கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு அதிகமாக இருப்பதால் சென்னை அணியில் இணைந்து விளையாட அதிக வாய்ப்பு உள்ளன.

ஆகாஷ் சிங் ; 19வயது இளம் வீரரான ஆகாஷ் சிங் கடந்த ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி உள்ளார். அதில் பல விக்கெட்டை கைப்பற்றி முக்கியமான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆகாஷ். இளம் வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக வழங்கும் தோனி அணியில் இளம் வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும்.

இஷாந்த் சர்மா ; இஷாந்த் சர்மா கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். அதுவும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் இஷாந்த் சர்மா இடம்பெறாதது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபக் சஹாருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.