இவர் நினைத்தால் போட்டியை 40 நிமிடத்தில் மாற்றிவிடுவார் ; அந்த அளவிற்கு இவரிடம் திறமை உள்ளது ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

சமீபத்தில் தான் இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்கி ரன்களை அடித்து டார்கெட் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 252 ரன்களை அடித்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடிய இந்திய அணி 303 ரன்களை அடித்தனர். ஆனால் இலங்கை அணி மொத்தமாக 317 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இலங்கை அணி. அதனால் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ;

India team celebrating the match win during day four of the 2nd test match between India and New Zealand held at the Wankhede Stadium in Mumbai on the 6th December 2021Photo by Saikat Das / Sportzpics for BCCI

அவரது பேட்டிங்-ஐ பற்றி குறை சொல்லவே முடியாது, ஏனென்றால் அவரது பேட்டிங் எப்பையுமே ஸ்பெஷல் தான். அவர் (ரிஷாப் பண்ட்) எப்படி பேட்டிங் செய்வார் என்று நன்கு தெரியும். அவர் விளையாடும் விளையாட்டுக்கு நாங்கள் எப்பொழுதும் தடையாக இருக்கவே மாட்டோம். அதற்கான சுதந்திரத்தை அவருக்கு எப்பொழுதும் கொடுப்போம்.

ஆனால் ஒரு சில போட்டிகளில் இந்திய அணியின் சூழ்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நேரங்களில் நாங்கள் அவரிடம் இந்திய அணியில் நிலையை சரியாக எடுத்து சொல்லுவோம். ஆனால் அவரது பிளான் எப்பொழுது எங்களுக்கு நன்கு தெரியும்.

ரிஷாப் பண்ட் இப்பொழுது விளையாடி கொண்டு இருக்கும்போது ஒரு ஷார்ட் அடிப்பார். ஆமாம், அது எதற்கு இப்பொழுது அடித்தார் என்று பல கேள்விகள் எழும்.. ஆனால் அவர் அதனை செய்வார். அதுமட்டுமின்றி ரிஷாப் பண்ட் நினைத்தால் ஒரு போட்டியை 40 நிமிடங்களில் மாற்றியமைக்க முடியும் என்று ரிஷாப் பண்ட் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் ரோஹித் சர்மா.

மேலும் ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பிங் பற்றி பேசிய ரோஹித் சர்மா ; எனக்கு தெரிஞ்சு கடந்த ஆண்டு இறுதியாக இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடினோம். அதில் இருந்து தொடர்ந்து ரிஷாப் பண்ட்-ன் விக்கெட் கீப்பிங் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே செல்கிறது.

அதுமட்டுமின்றி, DRS எடுக்க வேண்டிய நிலை வந்தால் நான் நிச்சியமாக ரிஷாப் பண்ட் -யிடம் என்ன செய்யலாம் என்று கேட்பது வழக்கம் தான். நான் எப்பொழுது போட்டி தொடங்கினாலும் ரிஷப பண்ட் -யிடம் சில விஷயங்களை கவனமாக பார்க்க சொல்லுவேன். அதனை வைத்து தான் முடிவுகள் எடுக்கப்படும்.

DRS என்பது லாட்டரி போல, எல்ல நேரத்திலும் சரியான முடிவுகளை ஒருவரால் எடுக்க முடியாது. அதில் நிச்சயமாக சில தவறுகள் நடக்க தான் செய்யும். அது ஒன்றும் தவறும் இல்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here