அடுத்த புவி இவர் தான் போல ; உள்ளூர் போட்டிகளில் அதிகமாக விளையாடவில்லை, ஆனால் பட்டைய கிளம்பிவிட்டார் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய சீரியஸ் :

கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் 1 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய.

அதனை அடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி-20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டிக்கான தொடரில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் மற்றுமின்றி பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தனர். வெறும் 23 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 114 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்பு 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது. இருப்பினும் ஐந்து வெறும் 118 டார்கெட்-க்கு ஐந்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளது இந்திய அணி. ஆமாம், இஷான் கிஷானை தவிர்த்து அணைத்து வீரர்களும் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தனர்.

அதுமட்டுமின்றி 22.5 ஓவர் முடிவில் 118 ரன்களை அடித்த இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றுள்ளது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் முன்னிலையில் இருக்கிறது இந்திய. இதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

ரோஹித் சர்மா பேட்டி :

முதல் போட்டியின் வெற்றியை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “ஒருநாள் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அளவிற்கு நேரத்தை கொடுக்க வேண்டும், அதனை நேரம் கிடைக்கும்போது செய்து வருகிறோம். அதுமட்டுமின்றி, இந்த தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆன முகேஷ் குமார் அருமையாக ஸ்விங் பவுலிங் செய்தார். முகேஷ் பெரிய அளவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியது இல்லை, இருப்பினும் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”