வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்திய. அதுமட்டுமின்றி, முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர்.
இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா ?
இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில போட்டிகளில் தொடர்ச்சியாக போட்டியில் பங்காளிக்கத்த வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது இந்திய அணி. கடந்த 2022ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வீரர் தான் ருதுராஜ் கெய்க்வாட்.
இந்த ஆண்டு முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஏசியன் கேம்ஸ் 2023 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர். அதில் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள ருதுராஜ்-க்கு ஏன் ? ப்ளேயிங் 11 வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ருதுராஜ் இதுவரை விளையாடிய போட்டிகளில் விவரம் :
கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ், இதுவரை ஒரு ஒருநாள் போட்டியிலும், 9 சர்வதேச டி-20 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரராக விளையாடி வரும் ருதுராஜ்-க்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க முக்கியமான காரணம்:
- ரோஹித் சர்மா , சுப்மன்கில் , கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் இருப்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லையா ?
- இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இருந்தே நல்ல ஒரு பழக்கம் இருக்கிறது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக இஷான் கிஷனுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா ?
உங்கள் கருத்து என்ன ? ருதுராஜ்-க்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமா ? இல்லையா ? உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் கீழே பதிவு செய்யுங்கள்.