இந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டியை பயன்படுத்தி இந்திய அணியில் நிரந்தமான இடத்தை இவர் கைப்பற்ற வேண்டும் ; கவாஸ்கர் பேட்டி

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருக்கு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் நாளை இரவு முதல் தொடங்க உள்ளது. அதிலும் நாளை முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோத உள்ளனர்.

அதனால் முதல் போட்டியை எதிர்கொண்டு காத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். ஐபிஎல் போட்டி என்று ஒன்று தொடங்கினால் போதும் ஒரு வீரரை பற்றி அல்லது ஒரு அணியை பற்றி பேசுவது வழக்கம் தான். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்திய அணியில் அவ்வப்போது புதிய மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அதேபோல தான் சூரியகுமார் யதாவுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் 2010 மற்றும் 2012 முதல் 2018,2019 முதல் 2022 போன்ற ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் விளையாடி வருகிறார் சூரியகுமார் யாதவ்.

அதனை தொடர்ந்து அருமையாக விளையாடி வரும் சூரியகுமார் யதாவுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. இதனை பற்றிய பேசிய கவாஸ்கர் ; “ஐபிஎல் போட்டிகளில் கடந்த இரு ஆண்டுகளாக அட்டகாசமான ஆட்டத்தை விளையாடி வருகிறார்.”

“இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. இதனை வைத்து தான் இந்திய அணியில் நிரந்திரமான இடத்தை கைப்பற்ற முடியும். ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து டி-20 உலககோப்பை போட்டிகள் உள்ளனர். அதில் பங்கேற்க வேண்டுமென்றால் இந்த ஆண்டு சிறப்பாக விளையாட வேண்டும்.”

அப்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்கிடைக்கும். மேலும் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னரை பற்றி பேசிய கவாஸ்கர் ;” கடந்த ஆண்டு வார்னருக்கு சற்று மோசமான ஆண்டாக தான் இருந்தது.”

“ஆனால் அவரது திறமையை அவருக்கு மட்டும் நிரூபித்தால் போதும் மற்ற யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆமாம், ஏதாவது ஒரு ஆண்டுகள் இப்படி ஆவது இயல்பு தான். இதனை அனைத்து வீரர்களும் அவ்வப்போது சந்தித்து கொண்டு வந்துள்ளனர்.”

கடந்த ஆண்டு மிகவும் மோசமாக இருந்தாலும், இந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாட உள்ளார். நிச்சியமாக அவரது அதிரடியான ஆட்டம் இருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர்…