தோனியிடம் இருந்து இதை நான் கற்றுக்கொண்டுள்ளேன் ; பெங்களூர் அணியின் புதிய கேப்டன் டூப்ளஸிஸ் பேட்டி ;

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனான டூப்ளஸிஸ், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை பற்றி பேசியுள்ளார்.

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் நாளை இரவு முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதற்கிடையில் நேற்று மாலை நான் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக தோனி அறிவித்தார். அதுமட்டுமின்றி, தோனி தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். இதனை பற்றி பல வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் சென்னை அணியின் முன்னாள் வீரர் மற்றும் பெங்களூர் அணியின் கேப்டனான டூப்ளஸிஸ் தோனியை பற்றி சில தகவலை பதிவு செய்துள்ளார். அதில் ” நான் சென்னை அணியில் இடம்பெற்றது எனக்கு சிறப்பாக அமைந்தது. நான் தோனியை மிகவும் அருகில் இருந்து அவரை பார்த்துள்ளேன்.”

“அவரது மூளை எப்படி வேலை செய்யும் என்று நான் பார்த்துள்ளேன். தோனி ஒரு அதிர்ஷ்டசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் அதிர்ஷ்டசாலி-க்கு நேர் எதிர் மாதிரி. மேலும் சென்னை அணியின் பயிற்சியாளரை பற்றி பேசிய டூப்ளஸிஸ் ; அவரும் சர்வதேச போட்டிகளில் சிறந்த வீரர் தான்.”

“அதுமட்டுமின்றி, நான் டிவில்லியர்ஸ் கேப்டனாக இருக்கும்போது நான் அணியில் விளையாடியுள்ளேன். அதனால் ஒவ்வொரு கேப்டனுக்கு ஒரு பவர் இருக்கும். அதனை வைத்து தான் அடுத்த முடிவை எடுக்க வேண்டும். அதேபோல தான் நானும் என்னுடைய பலம் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.”

டூப்ளஸிஸ் சென்னை அணியில் 2012 முதல் 2015வரையும், மற்றும் 2018 முதல் 2021 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் டூப்ளஸிஸ் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளார்.