இவரை நினைத்து கொஞ்சம் பயம் இருந்துச்சு ; ஆனால் பட்டைய கிளப்பிவிட்டார் ; ரோஹித் சர்மா பேட்டி ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 , ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் டி-20 போட்டிக்கான தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் ப்டர்களில் விளையாட வருகின்றனர். அதிலும் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

ஒருநாள் போட்டியின் விவரம்:

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதுமட்டுமின்றி ஏதோ அறிமுக வீரர் ஆட்டம் இழப்பது போல அனைவரும் ஒருவர் பி ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர்.

அதனால இங்கிலாந்து அணிக்கு ரன்களை அடிப்பது கடினமாக மாறியது. 25.2 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 110 ரன்களை மட்டுமே அடித்தனர்.அதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30, மொயின் அலி 14, வில்லே 21 ரன்களை அடித்துள்ளனர்.! பின்பு 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய.

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இது மிகவும் குறைவான ஒரு ரன்கள், அதனால் இந்திய அணிக்கு அது சுலபமாக மாறியது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா, ஷிகர் தவான் போன்ற இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினார்கள். அதனால் 18.4 ஓவர் முடிவில் 114 ரன்களை அடித்த நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் சீரியஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆமாம், ஒருநாள் போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றால் ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றிவிடும்.

போட்டி முடிந்த பிறகு வெற்றியை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; “எனக்கு தெரிந்து இங்கு இருக்கும் சூழ்நிலையில் டாஸ்-ல் சரியான முடிவுகளை எடுத்தது தான் முக்கியமான காரணமாக தெரிகிறது. சூழ்நிலையை நாங்கள் (இந்திய) சரியாக பயன்படுத்தியது.”

“எங்கள் அணியில் இருக்கும் வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக விளையாட கூடிய வீரர்கள் தான், அதனால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த போட்டியிலும் சில ஸ்விங் கிடைத்தது, அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி விளையாடினோம். இந்த விஷயம் எங்கள் (இந்திய) பவுலர்களுக்கு நன்கு தெரியும்.”

“நானும் (ரோஹித்) மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் புரிந்து கொண்டு விளையாடினோம். முதல் பந்தில் தான் சில யோசனை எங்கள் இருவருக்குள் தவறியது. அதுமட்டுமின்றி, நீண்ட நாட்கள் கழித்து ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.”

“அதில் சில பயம் இருந்தாலும், அவரால் எப்படி விளையாடுவார், அணிக்கு என்ன செய்வார் என்பது நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அணிக்காக என்ன செய்துள்ளார், அதுவும் இந்த இடத்தில் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். முதல் போட்டியில் வென்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”