இந்த ஒரு காரணம் போதும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா இருக்க முடியாது ; இந்திய அணியின் தேர்வாளர் சொன்ன காரணம் இதுதான் ; சரியாக தான் சொல்றாரு… போல..!

0

இந்திய அணியின் கேப்டன் பற்றி சர்ச்சை தினம்தோறும் பேசிக்கொண்டே தான் வருகின்றனர். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் விராட்கோலி.

அதனால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளன. வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது இந்திய அணி. அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்திய.

அதனால் உடனடியாக கேப்டனை நியமனம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது பிசிசிஐ. ஆனால் யார் கேப்டன் ? அனுபவம் வாய்ந்த வீரரா அல்லது இளம் வீரரா ? இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான கரீம் இதனை பற்றி கூறுகையில் ; ரோஹித் சர்மா அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருந்தாலும் அது குறுகிய காலத்திற்கு மட்டும் தான்.

ஏனென்றால் இந்திய அணிக்கு 2023 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள, உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அதனால் ரோஹித் ஷார்மை வெல்லும் கேப்டன் யார் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலை பார்த்தால் கேப்டனாக இருக்க கூடிய ஒரே வீரர் ரோஹித் ஷர்மா தான்.

ஏனென்றால் கே.எல்.ராகுல் அல்லது ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு இந்திய அணியை வெளிநடத்துவது சிரமம் தான். ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துவிட்டார். ஆனால் அடிக்கடி அவருக்கு காயம் ஏற்படுவதால் அவரால் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படுகின்றன.

அவருடைய விளையாட்டு பல விருதுகளை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த ரன்கள் அதிகம். அவ்வப்போது சில போட்டிகளில் விளையாடுவது இல்லை, சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டி நடக்கும் மும்பு பயிற்சியின் போது தொடை தசை பிடிப்பு ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியவில்லை.

ரோஹித் சர்மாவால் அனைத்து மூன்று போட்டிகளிலும் விளையாடுவது மிகவும் சிரமம். இப்பொழுது அவர் குணம் ஆகி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார் ரோஹித் ஷர்மா. ஆனால் அடிக்கடி காயம் ஏற்படுகின்ற வீரரையும் கேப்டனாக நியமனம் செய்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார் கரீம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here