கிரிக்கெட் வாழ்க்கையின் விளும்பில் இருக்கும் முன்னாள் கேப்டனான விராட்கோலி ; இது மட்டும் நடக்கவில்லை என்றால் அணியில் இடம்கிடைக்காது ; முழு விவரம் இதோ ;

0

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் விராட்கோலி பல மோசமான பின்விளைவுகளை சந்தித்து கொண்டு வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக விளையாடிய மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் விராட்கோலி.

அதன்பின்னர் பல போட்டிகளில் விளையாடிய விராட்கோலி பெரிய அளவில் விளையாட்டை விளையாடவில்லை. ஆமாம்…! விராட்கோலி நிச்சயமாக சச்சின் அடித்த 100 சதத்தை முறியடிப்பார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் சமீப காலமாக விராட்கோலி சதம் அடிக்க தவறிக்கொண்டு வருகிறார்.

இதனால் முதலில் விராட்கோலியே ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார். அதன்பின்னர், வெறும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விளையாடி வந்தார் விராட்கோலி. ஆனால் இந்திய அணியின் தேர்வாளர் மற்றும் பிசிசிஐ யின் அதிரடி முடிவால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியது பிசிசிஐ.

இது விராட்கோலி-க்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு தான் தெரியும். இதனால் பல சர்ச்சை எழுந்தது. பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்தார் விராட்கோலி. சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்றது.

அதில் 1- 2 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் இந்திய அணி எப்படியாவது வென்று சாதனை படைக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்துள்ளது. இதனால் நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி. இதுவரை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு முறை கூட ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை. ஆமாம்…! இறுதியாக தோனியின் தலைமையில் தான் ஐசிசி வென்றுள்ளது இந்திய.

இப்பொழுது விராட்கோலி வெறும் ப்ளேயர் ஆக மட்டுமே விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கேப்டனாக இருக்கும் பொழுது அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் இடம்பெற்றுவிடுவார். ஆனால் இப்பொழுது விராட்கோலி அதிரடியான ஆட்டத்தை விளையாடி மிடில் ஆர்டரில் அசத்தினால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும்.

ஒருவேளை தொடர்ந்து சில போட்டிகளில் விராட்கோலியின் ஆட்டம் சரியாக இல்லாத நேரத்தில் பின்னர் அவ்வப்போது தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது விராட்கோலி-க்கு மட்டுமின்றி அனைத்து வீரர்களுக்கும் இது பொருந்தும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..!

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள். அதில் விராட்கோலி இரு (ஒருநாள் மற்றும் டி-20) போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார். இந்த முறை சதம் அடித்து கம்பேக் கொடுப்பாரா ?? இல்லையா ??

விராட்கோலி அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது சரியா ?? அல்லது தவறான முடிவா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதில் பதிவு செய்யுங்கள்…! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here