CSK அணி தோல்வி பெற்ற பிறகு இதை மட்டும் தான் தோனி சொல்வார்; ஆனால் இது யாருக்கும் தெரியாது ; ருதுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் அதிகப்படியான இளம் வீரர்கள் அவ்வப்போது இடம்பெற்றும் விளையாடியும் வருகின்றனர். ஆனால், இப்பொழுது வாய்ப்பு கிடைக்கமால் திணறிக்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்துள்ளார் ருதுராஜ். ஆனால் இப்படிப்பட்ட திறமையான வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை.

ஐபிஎல் போட்டியில் 2020ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால் அடுத்த ஆண்டு 2021 போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினார் ருதுராஜ். அப்படி இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் ஹசாரே போட்டியில் 7 சிக்ஸர் அடித்து உலக சாதனை செய்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் பற்றி அனைவரும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் ருதுராஜ் கெய்க்வாட்-யிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ருதுராஜ் கூறுகையில் : ” எப்பொழுதும் ஐபிஎல் போட்டியில் தோல்வி பெற்றால் 10 அல்லது 15 நிமிடங்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் தோனி வந்தால், ரிலாக்ஸ் பாய்ஸ் என்று கூறுவார் (தோனி). அதுமட்டுமின்றி, தோனி எனக்கு நீயூட்ரலாக இருக்க வேண்டுமென்று கற்றுக்கொடுத்துள்ளார். தோல்வி மட்டுமின்றி போட்டியில் வெற்றி பெற்றால் கூட நியூட்ரல் ஆக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துள்ளார்.”

“வெற்றியோ, தோல்வியோ தோனி எப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவார். நிச்சியமாக தொடர்ந்து தோல்வி பெற்றால் அணியில் பல மாற்றங்கள் நடைபெறும். ஆனால் அது மட்டும் இன்னும் சென்னை அணியில் நடக்கவேயில்லை. தோனி மீட்டிங் எப்பொழுதுமே அதிகபட்சமாக 3 அல்லது 4 நிமிடங்கள் தான் இருக்கும். அதிலும் வாங்க அனைவரும் டின்னர் ஒன்றாக சாப்பிடலாம் என்று சொல்வார் தோனி. அங்கு சென்னை அணி ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று கூறுவார் தோனி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here