கே.எல்.ராகுல் பதிலுக்கு இவரை ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்குங்க…! இந்திய அணிக்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும் ; ஹர்பஜன் சிங் பேட்டி

உலக கிரிக்கெட் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளித்து வருகின்றனர். இதுவரை 21 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 1 போட்டியில் மட்டுமே இந்திய அணி விளையாடிய அதிலும் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு முக்கியமான காரணம் தொடக்க சரியாக இல்லாதது தான். ஏனென்றால் ரோஹித் சர்மா 0, கே.எல். ராகுல் 3 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளனர்.

ஒருவேளை அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி இருந்தால் நிச்சயமாக 200க்கு மேற்பட்ட ரன்களை இந்திய அணியால் அடித்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. அதுமட்டுமின்றி, முன்னனி பவுலர்களான முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற வீரர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பாஜன் சிங் அளித்த பேட்டியில்; இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை பற்றி பேசிய ஹர்பாஜன் சிங், ;

நானும் ரொம்ப நாட்களாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். இஷான் கிஷானுக்கு கொடுக்க வேண்டும். அதுவும் இந்திய அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மாவுடன் களமிறங்க வேண்டும் என்று. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் , 3வது இடத்தில் விராட்கோலி மற்றும் 4வதாக கே.எல்.ராகுல் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

ஆனால் ஹர்பஜன் சொன்னது போல் செய்யுமா இந்திய அணி?? அதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான். ஏனென்றால் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் அனுபவம் உள்ளது. அவர்களால் எப்படி அணியை எதிர்கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரியும்….!!

ஆனால் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஐபிஎல் 2021யின் லீக் போட்டிகளில் இறுதி இரு போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார்கள். அதில் சிறப்பான ஆட்டத்தை விளையாடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.